பறவைகள் ஆஸ்திரேலியா முதலிய நாடுகளில் இருந்து வருகின்றன. செப்டம்பர் - ஜனவரி வரை பறவைகளைப் பார்க்கும் பருவம். உண்ணி கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தை கொத்தி நாரை (Blue winged teal, Cattle egret, Painted stork, Eastern Grey heron, Glossy ibis, Darter or Snake bird, Spoonbill, Asian openbill stork) முதலிய 13 வகைகளுக்கு மேலான பறவைகளை இங்கு காணலாம்.
இந்த வருடம் பட்டாம் பூச்சி கூட்டங்கள் அதிகம் இருந்தன. ஏதோ, புது வகையான பூச்சி ஒன்றைப் பார்த்தோம்.
பறவைகள் இங்கு வந்து முட்டையிட்டு, குஞ்சு பொறித்து சென்று விடும். சூரிய உதயத்தின் போதும், சூரிய மறைவின் போதும், பறவைகளைப் பார்ப்பதற்கு சரியான நேரம். பறவைகளை நன்கு பார்ப்பதற்கு, பைனாகுலர் ஒன்றும் வைத்துள்ளார்கள்.
பறவைகள், இயற்கை சார்ந்த சூழல், யாரையும் ரசிக்க வைக்கும் இடம், வேட்டங்குடி.